Our Feeds


Monday, March 13, 2023

Anonymous

இம்ரான் மஹ்ரூப் MP யின் முயற்சியில் கிண்ணியா, அல்ஹிரா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவு.

 




திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்ரான் மகரூப் அவர்களின் தொடர் முயற்சியினால் கிண்ணியா அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதி உரிய அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.


கிண்ணியா அல்ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு அப்பாடசாலை அதிபரினால் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


அப்பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதியை பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர், மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் போன்றோருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »