பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்று மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இன்று கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், காணி வழக்கின் தீர்ப்பு வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் இறந்துவிடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.