Our Feeds


Monday, March 6, 2023

Anonymous

இந்தியாவின், மும்பை நகரில் ஆட்டோ ஓட்டிய பில்கேட்ஸ் - Video

 



இந்தியா வந்துள்ள மைக்ரோசொப்ட் தலைவர் மும்பை வீதிகளில் ஆட்டோ ஓட்டி மகிழும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவிற்கு வந்துள்ள மைக்ரோசொப்ட் தலைவரும், உலக பண காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்தார். இந்நிலையில் இன்று(மார்ச் 06) இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவை அவர் சந்தித்தார்.


அப்போது பில்கேட்ஸ், மகேந்திரா நிறுவனத்தின் மின்சார ஆட்டோ ஒன்றினை மும்பை சாலையில் ஓட்டி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



இந்த வீடியோவை, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு கூறியிருப்பதாவது: ‛ இது இனி பில்கேட்ஸ் கார்'... இதை ஓட்டிப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக் கூறியுள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »