Our Feeds


Friday, March 17, 2023

ShortNews Admin

பிரதி அதிபரின் அசிங்கமான செயல் - மாணவிக்கு WhatsApp மூலம் நிர்வாண படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது!



கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை WhatsApp ஊடாக அனுப்பியதாக கூறப்படும் குறித்த பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை காலத்தில் அலுவலகத்திற்கு மாணவியை அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மாணவியின் தாயார் கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணப் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், அது குறித்து மகளிடம் கேட்ட போதே குறித்த விடயம் வெளிவந்துள்ளது.

இதையடுத்து தாயும் மகளும் முறைப்பாடு செய்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »