இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த முட்டைகளின் தரம் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அனுமதி கிடைத்தவுடன் பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு இந்த முட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.