அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கப்படும் என சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளும் மேற்படி திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு விசேட போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை ஜனாதிபதியே வரவு செலவு திட்டத்தில் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.