கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (29) முற்பகல் 11 மணி முதல் இரவு 09 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துள்கோட்டே, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதியுடன் இணையும் குறுக்கு வீதிகள் உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவை நீர் விநியோகப் பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணைமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.