கித்துல்கல மஹபாக பிரதேசத்தில் உள்ள சந்துன் எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தில் கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார்.
குறித்த வெளிநாட்டவர்கள் நீர்வீழ்ச்சியில் இருந்து இறங்குவதற்காக சென்றுள்ளனர்.
இவர்களுடன் விசேட பயிற்சி பெற்ற ஆலோசகராக அமில மதுசங்க என்ற இளைஞனும் சென்றுள்ளார்.
இதன்போது தேவையான பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி, அருவியை கடக்க தேவையான கயிறுகளை தயார் செய்தார்.
அருவியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆபத்தான நிலையில் இருந்த 16 வெளிநாட்டவர்களை அமில மதுசங்க காப்பாற்றியுள்ளார். ஆனாலும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய மதுசங்க நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நீர்வீழ்ச்சியில் அதிகம் நீர் பெருக்கெடுத்ததால் இறந்தவரின் சடலம் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஊர் மக்களால் தேடி எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை கித்துள்களை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.