மத்திய மியன்மாரில் மியன்மார் விமானப்படையினர் மேற்கொண்ட விமானதாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் எரிந்த உடல்கள் உடற்பாகங்களை மீட்பதில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இரண்டு வருடங்களிற்கு முன்னர் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இடம்பெற்ற மிகமோசமான தாக்குதல் இது.
விமானதாக்குதல் இடம்பெற்ற வேளை பதுங்குழியொன்றிற்குள் பதுங்கியிருந்த நபர் ஒருவர் – தாக்குதலை நேரில் பார்த்தவர் விமானதாக்குதல் இடம்பெற்ற பகுதியில் சிறுவர்கள் உயிரிழப்பதையும் பெண்களின் அலறல்களையும் நிலத்தில் குவிந்து கிடந்த உடல்களை பார்த்ததையும் விபரித்தார்.
மத்திய சகாய்ங் பிராந்தியத்தில் உள்ள கன்பாலு நகரத்தை இலக்குவைத்து மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட விமானதாக்குதலில் 19 சிறுவர்கள் 27 பெண்கள் உட்பட 165க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் மனித உரிமைகளிற்கான நிழல் அமைச்சர் அயுங் மியோ மின் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் கர்ப்பிணியொருவர் உட்பட 20பேர் ஆபத்தான நிலையி;ல் உள்ளனர்.
158 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.
குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதியில் தொடர்ந்தும் விமானங்கள் காணப்பட்டதால் மருத்துவ குழுக்களாலும் மக்களாலும் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
உள்ளுர் நிர்வாக அலுவலக திறப்பிற்காக 300க்கும் அதிகமானவர்கள் பஜிக்யி கிராமத்தில் திரண்டிருந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்த பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் பெயரை குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.
அருகில் உள்ள கிராமத்திலிருந்து பலர் இந்த நிகழ்விற்காக வந்திருந்தனர் – திங்யான் புத்தாண்டு கொண்டாட்டங்களும் ஆரம்பமாகவிருந்த காலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பகுதி பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
நிழல்தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் புதிய அலுவலகம் மக்களிற்காக திறக்கப்படவிருந்தது. இராணுவ ஆட்சியாளர்களிற்கான எதிர்ப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எந்த முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை,கிராமங்களை சேர்ந்த அனேகமானவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததால் அவர்கள் விமானங்களை கவனிக்கவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.
8 மணிக்கு சற்று முன்னதாக மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களின் விமானங்கள் அப்பகுதியில் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டன அதன்பின்னர் ஹெலிக்கொப்டர் ஒன்று பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தனர்.
நான் அந்த பகுதிக்கு சென்றவேளை உயிருடன் இருப்பவர்களை தேட முற்பட்டேன் அனைத்தும் மிகவும் பயங்கரமானதாக காணப்பட்டன காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்வேளையிலேயே( மோட்டார் சைக்கிள்) அவர்களில் பலர் ( பெண்கள் குழந்தைகள்) உயிரிழந்தார்கள் சிலர் தங்கள் அவயங்களை இழந்திருந்தனர் வீதியில் நான் மனித தசைகளை பார்த்தேன் என அவர் தெரிவித்தார்.
பலர் அந்த பகுதியில் தங்கள் பிள்ளைகளை தேடுவதையும் கதறுவதையும் அலறுவதையும் பார்த்தேன் என அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் 5.30 மணிக்கு மீண்டும் திரும்பி வந்த விமானங்கள் அந்த பகுதியில் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
சிஎன்என்னிலால் இவற்றை உறுதி செய்ய முடியாத போதிலும் உள்ளுர் ஊடகங்கள் மற்றும் தேசிய அரசாங்கத்தின் தகவல்களுடன் கண்ணால் கண்டவர்களின் தகவல்கள் ஒத்துப்போகின்றன.
