Our Feeds


Monday, April 17, 2023

News Editor

26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து


 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.


தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (16) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தில் ஏறக்குறைய 26 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வாகனங்களுக்கு இடையில் இடைவெளி விடாமல் சென்றமையே இந்த விபத்திற்கு காரணம் என நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் வாகனங்கள் சேதம் அடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »