நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின் பயணக் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
அதன்படி, தற்போதுள்ள கட்டணம் 25% அதிகரித்துள்ளது.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சக்கரங்களைக் கொண்ட வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணத் திருத்தத்தின்படி கொட்டாவ - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கான புதிய கட்டணம் 400 ரூபாய் ஆகும்.
அத்துடன், கட்டுநாயக்கவில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு பயணிக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்த 1300 ரூபாயும், கொட்டாவையில் இருந்து காலிக்கு 500 ரூபாயும் கட்டணமாக அறவிடப்படும்.