கடலோர புகையிரத மார்க்கத்தின் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிய புகையிரத தண்டவாளம் தாழிறங்கியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான புகையிரத நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.