குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு டுபாயில் இருந்து மடகஸ்கருக்கு செல்வதற்காக விடுதலைப் புலிகள் தனி ஜெட் விமானத்தை வழங்கியுள்ளனர்.
எல்டிடிஈ வலையமைப்பில் செயற்பட்ட ஹர்பி என்ற இந்திக பண்டார என்ற நபரே அது என தெரியவந்துள்ளது.
ஹர்பி என்ற இந்த நபர் விடுதலைப் புலிகளுக்கு பிரபுக்கள் கொலைகள் மற்றும் பிரபுக்கள் கொலைத் திட்டங்களுக்காக அந்த அமைப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நாட்டில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித என்ற குடு சலிந்து ஆகியோர் மார்ச் 1 ஆம் திகதி டுபாயில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் மடகஸ்கருக்கு வந்த போது அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைக்கப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் போதைப்பொருள் பாவனை தொடர்பான அறிக்கையை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
அந்த அறிக்கையின் மூலம் அவர்கள் மடகாஸ்கருக்கு வந்த ஜெட் விமானம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் போதைப்பொருள் வியாபாரி ஹரக் கட்டா உள்ளிட்ட நண்பர்கள் குழுவுடன், வெளிநாட்டு நண்பர் ஒருவரின் மனைவிக்கு பிறந்த குழந்தையின் மத சடங்குகளுக்காகவே மடகஸ்கருக்கு வந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹரக் கட்டா இரண்டு தடவைகளில் 645 கிலோ ஹெரோயின், 3 சட்டவிரோத துப்பாக்கிகள், 05 AK 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நாட்டின் பாதுகாப்பு தரப்பினரிடம் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணையில், இது தொடர்பான போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பிரதான சந்தேகநபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.