இலங்கையில் கடந்த வருடத்தில் 38,772 புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும், ஒவ்வொரு வருடமும் சுமார் 5,200 மார்பக புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாக சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.