பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவருக்கு எதிராக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பௌசி நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தது கட்சியின் முடிவுக்கு எதிரானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.