Our Feeds


Thursday, April 27, 2023

ShortTalk

முகக் கவசம் - மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி பேணுங்கள் - மீண்டும் பணிப்பு



நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நேற்று முன்தினம் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு நேற்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதற்கமைய இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா தொற்றானது குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதானது ஆபத்தான விடயம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »