இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டி.வி.உபுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைவர் முன்னாள் மீன்பிடி அமைச்சரும் தற்போதைய பெற்றோலிய வள இராஜாங்க அமைச்சருமான டி.வி.சானக்கவின் தந்தையாவார்.