Our Feeds


Saturday, April 29, 2023

News Editor

பி.பி.சி நிறுவன தலைவர் இராஜினாமா




 முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளித்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, பி.பி.சி., நிறுவனம். இதன், 'டிவி சேனல்' மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். 


இந்நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின்  ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்  பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். 


இந்நிலையில் நேற்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப் பெரும் நன்கொடையாளராக இருந்து வருகிறார்.  


கடந்த, 2021 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய அளவில் (ஒரு பில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளார்.  


அதற்கு பரிசாக தான் அரசாங்கத்தின் பரிந்துரையின்படி, அவர் பி.பி.சி., தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 


எனவே ரிச்சர்ட் ஷார்ப் நியமனம் பி.பி.சி.யின் நடுநிலைதன்மை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.  இதையடுத்து, ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »