இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முத்திங்கள் வெளியீடாக ‘விழுமியம்’ சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா நேற்று (08.04.2023) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பித்தார்.