ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்கத ஆகியோருக்கு எதிரான வழக்கை ஓகஸ்ட் 25ஆம் திகதி மீள எடுத்துக்கொள்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குள் பலவந்தமாக நுழைந்து அதன் அங்கத்தவர்கள் இருவரை அச்சுறுத்தியமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.