இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஷ்ய தூதுவர், எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட அமெரிக்காவுக்கோ அல்லது ஏனைய மேற்கத்திய நாடுகளுக்கோ எந்த உரிமையும் இல்லை என்று வலியுறுத்தினார்.