Our Feeds


Monday, April 10, 2023

SHAHNI RAMEES

பிரான்ஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து..!

 

தெற்கு பிரான்ஸின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 



இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதற்கிடையே மூன்றாவது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கியிருந்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், அப்பகுதியில் உள்ள 30 கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »