Our Feeds


Thursday, April 20, 2023

News Editor

சிங்கப்பூரில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்ட விமான நிறுவனம்


 சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தை சேர்ந்த கார்த்திக் ராமசாமி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் பயணிக்கும் விமான பயணிகளில் கிட்டத்தட்ட 100%  தமிழர்கள். சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) அவர்களுடைய விமானத்திற்குள் அறிவிப்புகளை தமிழில் பேசுகிறார்கள்.


இந்தியாவை சேர்ந்த அனைத்து விமான நிறுவனங்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவுப்புகளை வெளியிடுகிறார்கள். 


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், மலிவுக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »