புத்தளத்தில் இருந்து சீதுவ நோக்கிய சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவில பகுதியில் வைத்து லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததோடு, மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தானது இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதோடு, சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சம்பத் கெலும் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதியான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்ததாகவும், அவருக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்கு காரணம் எனவும் மாரவில பொலிஸ் போக்குவரத்து பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் 4, 7 வயதுடைய இரு பிள்ளைகளுமே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விபத்து தொடர்பில் மாரவில தலைமையக போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.