யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் கொடிகாமம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிவந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் பயணித்த உத்தியோகத்தரை பின்னால் வந்த இ.போ.சபை பஸ் ஒன்று மோதியதோடு, எதிரில் வந்த லொறியொன்றும் குறித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாலும் இந்த விபத்து சம்பவித்ததாக தெரியவருகிறது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
