அமெரிக்காவும், தென்கொரியாவும் நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
இது குறித்து தென்கொரிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா - தென் கொரியா நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன. இது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
வடகொரியா இத்தகைய பயிற்சிகளை படையெடுப்பு ஒத்திகையாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க - தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகவே இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இரு நாடுகளும் மிகப் பெரிய இராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வடகொரியா தொடர்ந்து எவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.
அமெரிக்கா - தென்கொரியாவின் இராணுவப் பயிற்சிக்கு எதிர்வினையாக மார்ச் மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் (செயற்கை சுனாமி) சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது.