Our Feeds


Monday, April 10, 2023

ShortNews

SJB யின் MP க்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவது உறுதி - போட்டுடைத்தார் நளின் பண்டார!



புதுவருடத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண எப்போதும் கட்சிதாவும் நோக்கத்துடனேயே உள்ளார் அமைச்சு பொறுப்பை ஏற்பதுகுறித்தும் ஆர்வமாக உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ராஜித எப்போதும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன்  காணப்படுகின்றார் மேலும் கட்சிதாவுவது அவருக்கு பெரிய விடயமல்ல எனவும் நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »