இராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஹஆர்எஸ்எப்' என்ற துணை இராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
இதனால் கார்டூமில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர் இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது.
இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 200 பேர் உயிரிழந்ததாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் சூடானில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே சூடானில் நடந்து வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த வகையில் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்ததை காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.
