Our Feeds


Monday, April 17, 2023

SHAHNI RAMEES

#VIDEO: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்..!

 


பேராதனை போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள சம்பவமொன்று இடமபெற்றுள்ளது.



துஷானி துலாஞ்சலா என்ற 30 வயதுடைய தாயார் ஏப்ரல் 2ஆம் திகதி இவ்வாறு 4 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.



குருநாகல் அதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் தொழில் ரீதியாக ஆசிரியராக உள்ளார்.



அவர் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.



பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சம்பத் ஞானரத்னவின் பங்கேற்புடன் சிசேரியன் மூலம் பிரசவம் மேற்கொள்ளப்பட்டது.



குழந்தைகள் பிறந்து 32 வாரங்களே ஆன போதிலும் தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »