Our Feeds


Thursday, May 11, 2023

SHAHNI RAMEES

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து : 17 சிறுவர்கள் உயிரிழப்பு!

 

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 



மேலும் பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் கிளம்பியுள்ளனர். 



படகில் சிறுவர், குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.



படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 



நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 சிறுமிகள், 2 சிறுவன்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படகில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »