செர்பியாவில்; மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
செர்பியாவின் தலைநகர் பெல்கிரெட்டிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மால்டினோவா மற்றும் டுபோனா கிராமங்களில்தான் குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
ஆயுதம் ஏந்திய நபர் காரில் அமர்ந்து கொண்டு மால்டினோவா - டுபோனா கிராமங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.