அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.