Our Feeds


Saturday, May 6, 2023

SHAHNI RAMEES

ஏழு பேரின் உயிர்களை காவுகொண்ட நானுஓயா ரதல்ல வீதியில் மீண்டும் விபத்து..!

 

கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் காயமடைந்திருந்தனர். அதே இடத்தில் இன்று சனிக்கிழமை ஒரு வேன் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நானுஓயா ரதல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பின் நோக்கி சென்றமையால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியிருந்தால் பாரிய உயிர் சேதங்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் , எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால், தகுந்த தடையாளிகளை பாவித்து வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »