Our Feeds


Wednesday, May 3, 2023

Anonymous

அம்புலுவாவ காட்டுக்குள் பெண்ணின் அலறல் சத்தம்!! தேடிச்சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 



கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.


சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்தனர்.

அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »