Our Feeds


Wednesday, May 10, 2023

News Editor

அணுமின் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை - பில்கேட்ஸ்


 அமெரிக்காவில் அணுசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், புதிய அணுமின் நிலையத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸால் வயோமிங்கில் உள்ள கெம்மரரில் புதிய அணுமின் நிலையத்தைத் திறக்கப்படவுள்ளது.


காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அமெரிக்க எரிசக்தி சுதந்திரத்தை ஆதரிப்பதற்கும் இந்த ஆலை துணை புரியும் நம்பப்படுகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


இது குறித்து பில் கேட்ஸ் மேலும் தெரிவிக்கையில்,


அணுசக்தி, நாம் அதைச் சரியாகச் செய்தால், நமது காலநிலை இலக்குகளைத் தீர்க்க உதவும். அதாவது, மின்சார அமைப்பை மிகவும் விலையுயர்ந்த அல்லது குறைந்த நம்பகத்தன்மை கொண்டதாக மாற்றாமல் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை அகற்ற உதவும் என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »