ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்பியுள்ளார்.
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுக்காக ஜனாதிபதி கடந்த வியாழன் அன்று ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புறப்பட்டார்.
அங்கு, மூன்றாம் சார்லஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
பின்னர் கானா மற்றும் ருவண்டா ஜனாதிபதிகளுடனும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார்.
தொடர்ந்து, சனிக்கிழமை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் பங்கெடுத்த ஜனாதிபதி, சார்லஸ் மன்னரைச் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.