மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த தனுஷ்க கயான் என்ற 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக, களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.