Our Feeds


Monday, May 15, 2023

News Editor

கணினி கல்வியறிவு வீதம் உயர்வு


 2022ஆம் ஆண்டில் இலங்கையின் கணினி கல்வியறிவு வீதம் 35.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவர திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

திணைக்கள தரவுகளுக்கு அமைய 2021 ஆம் ஆண்டு 35 சதவீதத்தமாக காணப்பட்ட கல்வியறிவு 0.7 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டு 32 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் நகர்ப்புற மக்களிடையே கணினி கல்வியறிவு வீதம் 49.1 சதவீதமாகவும் கிராமப்புற மக்களிடையே 34.2 சதவீதமாகவும் உள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேல்மாகாணத்தில் வசிப்பவர்களில் 47.1 சதவீதமானவர்கள் கணனி அறிவுள்ளவர்கள் என்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 34.6 சதவீதமானவர்களும் மத்திய மாகாணத்தில் 34.2 சதவீதமானோருக்கு  கணினி கல்வியறிவு வீதம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவிக்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »