Our Feeds


Sunday, May 14, 2023

ShortTalk

குரங்குகளுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு!



குரங்குகளால் மேற்கொள்ளப்படும் அழிவுகள் காரணமாக,   பல பிரதேசங்களில் கித்துள் கைத்தொழில்துறை முழுமையாக சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கித்துள் கைத்தொழிலாளர்கள், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


கித்துள் கைத்தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எஹலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கித்துள் ​கைத்தொழிலாளர்களை சந்தித்த போதே, அவர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மிகுந்த சிரமத்துக்கு மத்தியில், கித்துள் மலரை வெட்டி பாணியை சேகரிக்துக்கொண்டிருக்கும் போது குரங்குகளால் அவை நாசமாக்கப்பட்டுவிடுகின்றன. நாளொன்றுக்கு ஒருலீற்றர் பாணியைக்கூட சேகரிக்கவிடாமல், அதனை குரங்குகள் நாசமாக்கிவிடுகின்றன என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

சீனாவின் தனியார் நிறுவனம். அவர்களுடைய மிருகக்காட்சி சாலைக்காக இந்நாட்டில் இருந்து குரங்குகளை கேட்டிருந்தனர். எனினும், சுற்றாடல் அமைப்புகள் சில முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் அந்த வேலைத்திட்டம் கைவிடப்பட்டது. சில சட்டப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் பின்னர், அந்த திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »