பொலன்னறுவை-சுங்காவில், நெலும்புர பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுங்காவில், நெலும்புர பகுதியைச் சேர்ந்த 30 வயதான இர்பான் என்ற இளைஞரே மேற்படி சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புலஸ்த்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.