கெக்கிராவ - எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹஇழுப்பள்ளம பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதிய கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர், மாணவன் சேனாபுர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.