Our Feeds


Tuesday, May 9, 2023

Anonymous

தமிழ் கைதிகள் மீது அச்சுறுத்தல்: லொஹானுக்கு நோட்டீஸ்

 



பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவியில் இருந்த போது, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவு அத்துமீறி நுழைந்து. அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, தனது கைத்துப்பாக்கியை தலையில் வைத்து அச்சுறுத்தினார் எனக் குற்றச்சாட்டப்படிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 14ம் திகதியன்று ஆஜராகுமாறு, அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

2021 செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அல்லது அதனை அண்​மித்த நாளொன்றில், இரவு ​வேளையில் சிறைச்சாலைக்குள் சென்றே, தமிழ்க் கைதிகள் இவ்வாறு லொஹான் ரத்வத்தே அச்சுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கில், கைதிகள் உட்பட் 14 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »