Our Feeds


Sunday, May 28, 2023

SHAHNI RAMEES

பெளத்த மத அவமதிப்பு - நடாஷா எதிரிசூரிய கைது

 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பெளத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையிலேயே நடாஷா எதிரிசூரிய சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.



நடாஷா எதிரிசூரியவிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்த பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »