பிரிட்டன் மன்னராக மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்ள்ஸ் முடிசூடிக்கொண்டார்.
மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை தலையில் அணிந்து முடிசூடிக்கொண்டார் அரசர் இரண்டாம் சார்ள்ஸ். இதையடுத்து, அவரது மனைவி கமீலா பார்கருக்கு ராணிக்கான மகுடம் சூட்டப்பட்டது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்துக்கு தங்க ரதத்தில் வந்திறங்கிய மூன்றாம் சார்ள்ஸ். அவருடன் ராணி கமீலாவும் வருகை தந்தார். அவர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முடிசூடுவதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்ட நிலையில் முதல் முறையாக, வெல்ஸ் மொழியில் பாடல்கள் இசைக்கப்பட்டன.
முன்னதாக, பிரிட்டன் மன்னருக்கான அரியணை திறக்கப்பட்டு, தங்க அங்கி அணிந்திருந்த மன்னர் அதில் அமரவைக்கப்பட்டார்.
அங்கு அவரது கையில் செங்கோல் வழங்கப்பட்டது. பாரம்பரியமிக்க சிறிய கரண்டியில் பிரத்யேக எண்ணெய் தலையில் விடப்பட்டது. பிறகு அரியணையில் அமர்ந்திருந்த பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தலையில் எட்வர்ட் மணிமகுடத்தைச் சூட்டினார்
பேராயர். சுமார் 700 ஆண்டுகால பாரம்பரியமிக்க மாளிகையில், பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் முடிசூட்டிக்கொண்டார்.
பிரிட்டனில், இரண்டாம் எலிசபெத் மறைவைத்
தொடா்ந்து மூத்த மகன் சாா்ள்ஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா். அவரது முடிசூட்டு விழா சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.மூன்றாம் சார்ள்ஸ் முடிசூடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, லண்டன் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
முடிசூட்டு விழாவின்போது, மறைந்த இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட புனித எட்வர்ட் கிரீடத்தை, அரசர் மூன்றாம் சார்ள்ஸ் சூட்டிக்கொண்டு கையில் செங்கோல் ஏந்தி அரியணையில் அமரும் அவருக்கு புனித எட்வர்ட் மணிமகுடம் அணிவிக்கப்பட்டு முடிசூட்டப்பட்டது.
மற்றொரு கையில் தடி ஏந்தி அவர் ஆட்சிப்பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.
கடந்த 1953ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி மறைந்த இரண்டாம் எலிசபெத் பதவியேற்றுக் கொண்டார். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மன்னர் முடிசூடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உலக நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் இலங்கை சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 முக்கியத் தலைவா்கள், 203 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பரில் மறைந்தாா். இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்ள்ஸ் கடந்த நவம்பரில் அரியணையேறிய நிலையில் இன்று முறைப்படி முடிசூட்டிக்கொண்டார்.