தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான திருகோணமலை, தடாகங்கனை வீதியிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பாய்மரக் கப்பலுடன் இணைக்கப்பட்டிருந்த பாய்மரத்திற்கு தீ வைத்துள்ளதாக திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து, அருங்காட்சியக பொறுப்பாளர் பி.எச்.ஏ.ரூபா, பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்., அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் இருந்து அவர் பார்த்தபோது, படகில் தீப்பிடித்து, கீழ் தளத்தில் இருந்து புகை வெளியேறியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
தீயினால் பாய்மரப் படகுக்கு சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் வேறு மாதிரிகள் அல்லது கலைப்பொருட்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
