புதிய இராஜாங்க அமைச்சு நியமனங்கள் சிலவற்றை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார்.
இது தொடர்பில் இன்றுகாலை அவர் விசேட சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.
அரசுக்கு ஆதரவளித்துவரும் எதிரணி உறுப்பினர்கள் சிலருக்கு இந்த பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார். இதில் யார் யாருக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.
முஸ்லிம் எம்.பி க்கள் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் அவர்களுக்கும் பொறுப்புகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.