Our Feeds


Friday, June 9, 2023

ShortNews

16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு



களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் மே 11 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த போது கைது செய்யப்பட்டார்.


கணவரின் மடிக்கணினியை ஆராய்ந்து பார்த்த போது, தனது கணவர் மாணவிகளுடன் உறவில் ஈடுபட்டதாக குறித்த ஆசிரியரின் மனைவி களுத்துறை வடக்கு பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 


இதையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »