Our Feeds


Wednesday, June 14, 2023

ShortNews Admin

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பது பற்றி முக்கிய தீர்மானம்!



வவுனியா மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான இரண்டாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.


இதன்போது, வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கால்நடைகள் திருட்டு அது தொடர்பில் மக்களுக்கு பொலிஸார் மீதான நம்பிக்கையின்மை, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் வைப்பதற்கான சட்டவிரோத கட்டிடங்களை நகரசபை அகற்றுமாறு விடுத்த கோரிக்கைகள், வீரபுரம் பிரதேசத்தில் சிலர் சட்டவிரோதமாக காணிகளை அடாத்தாக கையகப்படுத்தல், கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் இடம்பிடித்து பணம்பெறல் மற்றும் போதைப்பொருள் விற்பனை, வவுனியா வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பற்றாக்குறை மற்றும் வவுனியாவில் தனியார் மருந்தகங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர்கள் இன்மை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்ததுடன், அது தொடர்பான சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 


இதனபோது பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், செல்வம் அடைக்கலநாதன்,  வினோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ. சரத் சந்திர, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி,   உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிசார், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »