மூன்றாவது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றார் அர்துகான்.
துருக்கியின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏர்டோகன் அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து, தலைநகர் அங்காராவில் நடைபெற்ற விழாவில் எர்டோகன் துருக்கி ஜனாதிபதி பதவியேற்று கொண்டார்.
கொட்டும் மழையிலும் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
