குறித்த கப்பலில் அடையாளம் தெரியாத சிலர் நுழைந்ததை கண்டு கப்பல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், கப்பல் மாலுமி உள்ளிட்ட ஊழியர்கள் கப்பலின் இஞ்சின் அறைக்குள் தங்களை பூட்டிக்கொண்டு இருந்துள்ளனர்.
மேலும், இது குறித்து இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கடல்சார் பாதுகாப்பு படையினருக்கு அபாய சமிக்ஞை அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர், கப்பலில் இருந்த ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
